இன்று கமல் முன்னிலையில் கவின் காதல் பஞ்சாயத்து?

இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் இரண்டே இரண்டு பிரச்சனைகள்தான்.

ஒன்று கவினின் காதல் பஞ்சாயத்து, இன்னொன்று வழக்கம்போல் மற்றவர் மீது மீரா சுமத்தும் அபாண்ட குற்றச்சாட்டு.

இதில் மீராவின் பிரச்சனையை அவரை வீட்டை விட்டு வெளியேற்றினால் மட்டுமே தீர்க்க முடியும்.

எனவே இன்றைய நிகழ்ச்சியில் கவினின் காதல் பஞ்சாயத்து ஓடும் போல் தெரிகிறது.

சற்றுமுன் வெளியான முதல் புரமோ வீடியோவில், ‘மாத்தி மாத்தி பேசறது’, அடிமாறுவது இந்த வீட்டில் சகஜமாகிவிட்டது என்றும், ஆனால் இதெல்லாம் பதவி மோகத்திற்காக இல்லை என்றும், ஒருவிதமான ‘மோகம்’ என்றும் தமிழில் சொல்வதென்றால் ஃபீலிங்ஸ்’ என்று கமல் பேசுகிறார்.

மேலும் ‘நினைத்தாலே இனிக்கும்’ என்று கூறி ஒரு சாக்லேட்டையும் காண்பிக்கின்றார்.

இந்த வாரம் ஒரே ஒரு சாக்லேட்டினால்தான் கவின், சாக்சி, லாஸ்லியாவுக்கு இடையே பிரச்சனை எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இன்றும் நாளையும் கவினின் காதல் பஞ்சாயத்தும், மீராவுக்கான குறும்படமும் இருந்தால் இரண்டு நாட்களின் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Recommended For You

About the Author: Editor