பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறுவது யார்?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் முதல் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து பாத்திமா பாபு மற்றும் வனிதா ஆகிய இருவர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற மோகன் வைத்யா, மீராமிதுன், சரவணன், ஷெரின் , அபிராமி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் மீராமிதுன் தொடர்ந்து சக போட்டியாளர்களையும், பார்வையாளர்களையும் எரிச்சல் படுத்தி வருவதால் இவருக்கு இந்த வாரம் குறைவான ஓட்டுக்கள் பதிவாகியிருப்பதாகவும், இதனையடுத்து இவர் இந்த வாரம் வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே கூறப்பட்டு வருவதால் நாம் எதிர்பார்க்காத மோகன் வைத்யா இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறவிருப்பதாக நமக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.


Recommended For You

About the Author: Editor