
விகாரையில் இளம் பிக்குவை பாலியல் துஷ்பிரயோகம் உட்படுத்திய குற்றச்சாட்டில் விகாரபதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுதொடர்பில் தெரியவருவது, கேகாலை மொலகொட பிரதேசத்திலுள்ள விகாரை ஒன்றின் இளம் பிக்குவை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் குறித்த விகாரையின் விகாராதிபதியை நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.
இதேவேளை பாதிக்கப்பட்ட இளம் பிக்குவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கேகாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்ட இளம் பிக்கு 3 வருடங்களுக்கு முன்னர் துறவறத்தில் இணைந்து கொண்ட 13 வயதான ஒருவரும் ஆவார்.