இளையராஜாவின் அழிவு காலம் நெருகி விட்டதா ?

கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக தமிழ் சினிமாவை ஆளும் அந்த மகா கலைஞனின் இசையை கேட்டு தற்போது வளர்ந்து வரும் வாரிசுகளும் மெய்சிலிர்த்து போவார்கள். பாமரனுக்கும் இசையின் உன்னதத்தை உணர்த்துவதற்காக இசையின் பழைய மரபுகளைப் பெயர்த்தெறிந்த புரட்சிக்காரர் இளையராஜா என்றால் அது மிகையாகாது. ஆனால் அவரின் ஆணவத்தால் அவரே தற்போது அழிந்து வருகிறார். தான் சம்பாதித்த பெயர் புகழ் எல்லாவற்றையும் தன் வாயால் கெடுத்து வருகிறார்.

அப்பேற்பட்ட ஜாம்பவானின் இசையை சினிமா மோகமுள்ள வளர்ந்து வரும் தலைமுறையினர் தங்கள் படங்களில் ரெஃபரன்ஸாகவோ அல்லது பின்னணியிலோ வைக்கின்றனர். அந்தவகையில் சமீபத்தில் வெளியான 96 மற்றும் மெஹந்தி சர்க்கஸ் போன்ற படங்களில் அதிகமாக இளையராஜா பாடல்களும் அவரது பெயரும் பயன்படுத்தப்பட்டது. 1996களில் நடந்த காதல் காட்சி என்றபடியால், அதில் இளையராஜாவின் பாடல் வருவது போல படத்தை இயக்குனர் எடுத்துள்ளார். இதில் என்ன பிழை இருக்கிறது. ஆனால்…

இது குறித்து இளையராஜா பிரபல யுடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுக்கும் போது ” 80களில் , 90களில் இடம்பெறும் பாடல் என்றால் ஏன் நான் இசையமைத்த பாடல்களை வைக்கவேண்டும்?. அந்தப்படத்தின் இசையமைப்பாளரே அந்த காலத்திற்கு ஏற்றார்போல ஒரு பாடலை இசையமைக்க முடியாதா?. இது அவர்களின் திறமையின்மை மற்றும் ஆண்மை இல்லாத தனத்தைதான் காட்டுகிறது’ எனக் கடுமையாக சாடினார்.

தற்போது இசைஞானியின் இந்த பேச்சிற்கு சமூக வலைத்தளங்களில் கண்டங்கள் எழுந்துள்ளது. மேலும் இளையராஜா இசையமைத்த பிதாமகன் படத்தில் சூர்யா மற்றும் சிம்ரன் நடனமாடும் பாடலை சுட்டிக்காட்டி நீங்கள் மட்டும் ஏன் இதில் பழையப் பாடல்களின் தொகுப்பை பயன்படுத்தியுள்ளீர் இது ஆண்மையில்லாதத்தனம் இல்லையா? எனக் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

சமீபத்தில் தனது பாடலை பாடினால் தனக்கு காசு தரவேண்டும் என்று ஒரு சட்டத்தை இளையராஜா போட்டு பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டார். அந்த சூடு ஆற முன்னரே இப்படி ஒரு சிக்கலில் சிக்கி தனது புகழை இழந்துள்ளார். இது தேவையா ? வயது வந்தால் கூடவே அனுபவமும் முதிர்சியான சொற்களும் கூடவே வரும் என்பார்கள். ஆனால் இளையராஜா விடையத்தில், அது வேறு விதமாக அல்லவா உள்ளது


Recommended For You

About the Author: Editor