கிளிநொச்சியையும் விட்டுவைக்கவில்லையா 5ஜி அலைவரிசை!!

கிளிநொச்சியையும் 5ஜி தொழில்நுட்பம் ஆக்கிரமிக்கவுள்ளதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த தொழில்நுட்பத்திற்கான கோபுரங்கள் கிளிநொச்சி வைத்தியசாலையின் பின்புறமாகவும் உருத்திரபுரம் பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

5ஜி தொழில்நுட்பத்தினால் பல்வேறு தாக்கங்கள் ஏற்படுவது குறித்து தாம் அறிந்துள்ளதாகவும் குறித்த தொழில்நுட்ப வசதி எமது பிரதேசத்திற்கு தேவை இல்லை என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் குறித்து மக்களை தெளிவுபடுத்தும் செயற்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

2ஜி, 3ஜி வசதிகளையே தாம் தடுத்ததாக தெரிவிக்கும் பிரதேச மக்கள், குறித்த தொழில்நுட்பத்தினால் விவசாயத்திற்கு உதவும் பூச்சிகள், பறவைகள் என பலவும் உயிரிழக்க நேரிடும் என்பதை அறிந்தே அவற்றை தாம் தடுத்ததாகவும் தெரிவிக்கின்றனர்.


Recommended For You

About the Author: Editor