மருத்துவமனையில் பாலியல் வன்புணர்வுக்கு முயற்சி.

யாழில் உள்ள  மருத்துவமனையில் சுத்தீகாிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரை பிடித்து கை, கால்களை கட்டி பாலியல் பலாத்காரத்திற்கு முயன்ற இளைஞன் தப்பி ஓடியுள்ள நிலையில் மீட்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

குறித்த மருத்துவமனையில் சுத்தீகாிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரை அதே வைத்திய சாலையில் நோயாளி ஒருவரை பராமாிப்பதற்கான நின்ற இளைஞன் மடக்கி பிடித்து கை,கால்க ளை கட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளாா்.

இதனையடுத்து குறித்த பெண் சத்தமிட்ட நிலையில் மக்கள் கூடுவதை அவதானித்த குறித்த இளைஞன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆடைகள் கிழிக்கப்பட்டிருந்த பெண்ணை மீட்ட மக்கள் வைத்தியசாலையில் அனுமதித்தனா்.


Recommended For You

About the Author: ஈழவன்