தென்கைலை ஆதீனத்திற்கு ஆதரவாக போராட்டம்

தென்கயிலை ஆதீனம் வணக்கத்துக்குரிய தவத்திரு அகத்தியர் அடிகளாரின் கௌரவத்திற்கு பங்கம் விளைவிக்கும் முகமாக சுவாமிகள் மீதும் காணி உரிமையாளர் மீதும் மேற்கொள்ளப்பட்ட தேனீர் தாக்குலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தாக்குதலை மேற்கொண்டவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் கோரியும் சைவ மகாசபையினால் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
யாழ்.கைலாச பிள்ளையார் ஆலய முன்றலில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
 இதில் யாழ்ப்பாணம் சின்மய மிஷன் குருமுதல்வர் வணக்கத்துக்குரிய சதாகாசிதானந்தா சுவாமிகள் யாழ்ப்பாணம் கைலாச பிள்ளையார் ஆலய ஆதீன குருக்கள் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் திரு ஆறுதிருமுருகன் உட்பட பல சமயத்தலைவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: ஈழவன்