ஈரானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா!

ஈரானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப், ‘வியாழக்கிழமையன்று ஹார்மோஸ் ஜலசந்தி பகுதியில் இருந்த அமெரிக்க கடற்படை கப்பலுக்கு மிக அருகே, அச்சுறுத்தும் வகையில் ஈரானின் ஆளில்லா விமானம் பறந்து வந்தது.

உடனடியாக அந்த விமானத்தை அமெரிக்க வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அமெரிக்காவின் எச்சரிக்கையை புறக்கணித்து ஈரான் விமானம் வந்ததால் அமெரிக்க தரப்பு தற்காப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.

வீரர்களையும், நாட்டு நலன்களையும் தற்காத்துக்கொள்ளும் உரிமை அமெரிக்காவுக்கு இருக்கிறது.

அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் சர்வதேச வர்த்தகத்துக்கு இடையூறாக செயல்படும் ஈரானுக்கு அனைத்து நட்பு நாடுகளும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

எனினும், குறித்த செய்தி தொடர்பாக ஈரான் தரப்பில் எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.


Recommended For You

About the Author: Editor