அனைத்து பாடசாலைகளுக்கும் டிஜிட்டல் ஆசிரியர்!!

பாடசாலைகளின் கரும்பலகை மற்றும் வெள்ளை பலகைகளுக்கு பதிலாக டிஜிட்டல் பலகை வந்து விட்டதாகவும் இன்னும் இரண்டு மாதங்களில் டெப் கணனி மாணவர்களுக்கு வழங்கப்படும் எனவும் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கிரிவுல்லா கல்வி வலயத்தின் ஹென்டியகல ஸ்ரீ ரதன ஜோதி மகா வித்தியாலத்தில் 5 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிகளை கொண்ட தொழிற்நுட்பம் மற்றும் ஆரம்ப கற்கை நிலையத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

பண்டைய காலத்தில் மணலில், சிலேடு எழுதினோம். பின்னர் கரும் பலகை அதற்கு பின்னர் வெள்ளை பலகையில் எழுதினோம். தற்பேது டிஜிட்டல் பலகை வந்துள்து.

தேசிய பாடசாலைகளில் உயர் தரத்தில் பயிலும் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட ஒரு லட்சம் பேருக்கு முதல் கட்டமாக டெப் கணனிகள் வழங்கப்படும். தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இன்னும் இரண்டு மாதங்களில் உயர் தர வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு டெப் கணனி வழங்கப்படும். டெப் கணனி என்பது தற்போதுள்ள ஆசிரியர்களுக்கு மேலதிமான டிஜிட்டல் ஆசிரியர். டிஜிட்டல் ஆசிரியரை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.

இந்த டிஜிட்டல் ஆசிரியர் நீண்டநாட்கள் செல்லும் முன்னர் பாடசாலைகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor