ரவுடிகளை வளைத்துப் பிடித்த பொதுமக்கள்!

யாழ்ப்பாணத்தில் வீடு புகுந்த தாக்குதல் நடத்திய ரவுடிகளை இளைஞர்கள் வளைத்துப் பிடித்து நையப்புடைத்ததில் இரண்டு ரௌடிகள் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள வீடொன்றிற்கு நேற்று மாலை நான்கு மோட்டார் சைக்கிளில் எட்டு ரௌடிகள் வந்திறங்கினர்.

ஆயுதங்களுடன் வந்த ரவுடிகள், குடும்பத்தலைவரை கடுமையாக தாக்கினார்கள். கொட்டனால் தாக்கியதில் குடும்பத்தலைவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

வீட்டில் பெரும் அல்லோலகல்லோலம் ஏற்பட்டதையடுத்து, அங்கு இளைஞர்கள் குவித தொடங்கினர். இதையடுத்து, ரவுடிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

அந்த பகுதி இளைஞர்கள் ஒன்று திரண்டு, ரவுடிகளை விரட்டிச் சென்றனர். இதில் இரண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற நான்கு பேரை இளைஞர்கள் பிடித்தனர். இரண்டு மோட்டார் சைக்கிள்களில் சென்ற நான்கு பேர் தப்பிச் சென்றனர்.

பிடிக்கப்பட்டவர்களை பிரதேச இளைஞர்கள் கட்டி வைத்து நையப்புடைத்தனர். அவர்கள் அனைவரும் 23 வயதிற்குட்பட்டவர்கள்.

ஒருவர், சங்கானை பகுதியிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபரின் மகனாவார். இன்னொருவர், யாழ் நகரிலுள்ள பிரபல ஆசிரியர் ஒருவரின் மகன்.

நையப்புடைக்கப்பட்டதில் இரண்டு ரவுடிகள் பலத்த காயமடைந்தனர்.

பின்னர் இளவாலை பொலிசாரிடம் நான்கு ரவுடிகளும் ஒப்படைக்கப்பட்டனர். பலத்த காயமடைந்த இரண்டு ரௌடிகளும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Recommended For You

About the Author: Editor