கதிர்காம கந்தனிடம் வரம் கேட்கும் அரசியல்வாதிகள்!

பிரபல அரசியல்வாதிகள் சிலர் கதிர்காமம் முருகன் ஆலயத்தில் விசேட பூஜை வழிப்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் குறித்த அரசியல்வாதிகள் தீவிர வேண்டுதல்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் தங்களின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக கந்தனை குளிர்விக்கும் வகையில் பல்வேறு பூஜை வழிப்பாடுகளை மேற்கொள்வதாக தெரிய வருகிறது.

நள்ளிரவில் ஆரம்பமாகும் பூஜைகள் அதிகலை வரை நீடிப்பதாக ஆலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Recommended For You

About the Author: Editor