ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு செல்லாமை தனி தேசியம் காரணமாம்- மாவை!

தமிழ்தேசிய கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினா்கள் கொழும்பில் இல்லாமையினாலும் வேறு சில காரணங்களாலும் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. என நாடாளுமன்ற உறுப்பினா் மாவை சேனாதிராசா கூறியுள்ளாா்.

கன்­னியா பிள்­ளையார் கோவில் விவ­காரம் குறித்து ஜனா­தி­ப­தி­யுடன் பேச்­சு­வார்த்தை நடத்த தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­ன­ருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்தும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­ பினர் ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்பில் கலந்­து­கொள்­ள­வில்லை.

இது குறித்து வின­வி­ய­போதே அவர் இதகை குறிப்­பிட்டார். மேலும் கல்­முனை வடக்கு பிர­தேச செய­லக விவ­காரம் குறித்து கோடிஸ்­வரன் எம்.பிக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் அவ­ரையும் கலந்­து­கொள்ள வேண்டாம் என கூட்­ட­மைப்பு வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

இது தொடர்பில் இலங்கை தமி­ழ­ரசு கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராஜா குறிப்­பி­டு­ கையில், தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் முக்­கி­ய­மான சில உறுப்­பி­னர்கள் வெளிப் பிர­தே­சங்­களில் உள்ள கார­ணத்­தி­னாலும் வேறு சில முக்­கிய கார­ணங்­க­ளுக்­கா­கவும்

தாம் கலந்­து­கொள்­ள­வில்லை. இந்த சந்­திப்பு நேற்று இடம்­பெற்­றது. ஆனால் நாம் கலந்­து­கொள்­ள­ வில்லை. தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பினர் மாத்­திரம் ஜனா­தி­ப­தியை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்த கோரிக்கை விடுத்­துள்ளோம்.

அனே­க­மாக அடுத்த பாரா­ளு­மன்ற அமர்­வு­களில் போது அல்­லது அந்த வாரத்தில் ஏதேனும் ஒரு நாளில் நாம் ஜனா­தி­ப­தியை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்த வாய்ப்­புகள் உள்­ளது. அதேபோல் கல்­முனை வடக்கு பிர­தேச செய­லக விவ­காரம் குறித்தும்

அமைச்சர் வஜிர அபே­வர்­தன மற்றும் கூட்­ட­மைப்பின் கோடீஸ்­வரன் எம்.பி ஆகி­யோரை சந்­திக்­ கவும் ஜனா­தி­பதி அழைப்பு விடுத்­தி­ருந்தார். ஆனால் இது குறித்து இப்­போது ஒரு தீர்­மானம் எட்­ டப்­பட்­டுள்­ளது. புதிய கணக்­காய்­வாளர் நிய­மிக்கப்பட்­டுள்ள நிலை­யிலும்

முதற்­கட்ட நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள நிலை­யிலும் ஜனா­தி­ப­தியை இப்­போது சந்திக்க வேண்டிய அவசியம் இல்லையென நாம் நினைக்கின்றோம். ஆகவே கோடீஸ்வரன் எம்.பி இப்போது சந்திக்க தேவையில்லை என நம் கூறியுள்ளோம்.

அவரும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.


Recommended For You

About the Author: Editor