6மாத காலத்திற்குள் தீர்வு வேண்டும் – அடம்பிடிக்கும் சி.வீ.கே

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அன்றாடப் பிரச்சனைகள் முதல் அடிப்படைப் பிரச்சனையான இனப்பிரச்சனைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்களில் தீர்வைக் காண்பதற்கு உண்மையாக- விஸ்வாசமாக- அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம் என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமாக இருந்தால் செய்யக் கூடிய விடயங்களை உடனடியாகச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் எங்கள் அனுகுமுறையை நிச்சயமா கநாங்கள் மீள்பரிசீலனை செய்வோம்.

இவ்வாறுதெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண அவைத் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத்தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம், தற்போது போன்று தொடர்ந்தும் கூட்டமைப்பு தமக்கு ஆதரவு வழங்கும் என பிரதமரும் அவரது அரசாங்கமும் நினைத்தால் அது அவர்களது தவறு. ஏனெனில் அவ்வாறானஆதரவு வழங்கும் நிலைதொடர்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்பதையும் சொல்லிவைக்க விரும்புகிறோம் என்றும் தெரிவித்தார்.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் அடிவருடிகளாக அல்லது அக் கட்சிக்குப் பின்னால் போகின்றவர்களாக கண்ணை மூடிக் கொண்டு இருப்பவர்களாக நாம் இருப்போம் என அவர்கள் நினைத்தால் அதுவும் தவறு என்பதையும் சுட்டிக்காட்டுகின்றோம் என்றும் தெரிவித்தார்.

யாழ் கல்வியங்காட்டிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடத்திய செய்தியளார் சந்திப்பின் போது, யாழில் வைத்து பிரதமர் இரண்டு வருடத்திற்குள் தீர்வு எனக் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலையே சிவஞானம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாகஅவர் மேலும் தெரிவித்ததாவது,

யாழ் வந்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரண்டு, மூன்று வருடத்திற்குள் தீர்வு என்றும் சொல்லியிருக்கின்றார். அவரது இந்தக் கருத்துக்கள் சாத்தியமில்லை என்பதுடன் ஏமாற்றும் கருத்தக்களாகவே அமைகின்றன. ஆக நாங்கள் எல்லாம் வெறும் ஏமாளிகள் என்று நினைக்க ஏலாது. இன்றும் ஒரு வருடத்திற்குள் அரசாங்கம் முடிவடைகிறது. அதேநேரத்தில் நடைபெறவுள்ள ஐனாதிபதித் தேர்தலில் வேறு ஒருவர் வருவராயின் அதற்கு முன்னரே இந்தப் பாராளுமன்றம் கலைக்கப்படலாம்.

இவ்வாறான நிலையில் அடுத்துவரும் மூன்று வருடத்திற்குள் தான் தீர்வு தருவேன் என்று அவர் சொல்வதை நாங்கள் நம்ப வேண்டுமென்று யாராவது எதிர்பார்த்தால், வெறும் மடையர்களாகத் தான் நாங்கள் இருக்க வேண்டும். ஆக அதுசாத்தியமில்லை. இந்த இரண்டு மூன்று வருடத்திற்குள் என்ன தீர்வு என்றும் சொல்லவில்லை. ஆனாலும் மூன்று வருடத்தில் தீர்வு என்று பிரதமர் சொல்லியதை மக்களும் ஊடகங்களும் தூக்கிப் பிடிக்கிறார்கள்.

அதேநேரம் தமிழ் சிங்கள முஸ்லீம்கள் எல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றதைப் பற்றி ஒருதரும் சொல்றதில்லை. உண்மை அதுதான். அது குழறுபடியாக முடியும். இப்ப அரசியலமைப்பில் நடந்ததுதான் தொடர்ந்தும் நடக்கும். ஆகவே இப்ப அவர் செய்யக் கூடிய விடயங்களைச் செய்யலாம் தானே. அதனால் அவருடைய பதவிக் காலம் உறுதிப்படுத்தக் கூடியதாக இந்தக் டிசம்பர் வரை இருக்கிறது.
ஆகையினால் தான் இந்தவருட இறுதிக்குள் அதாவது ஆறு மாதத்திற்குள் தீர்வை வழங்க வேண்டுமென்று எங்களுடைய கட்சித் தீர்மானத்தை எடுத்துள்ளது.

அந்தஅடிப்படையில் தான் அதனை மாவை சேனாதிராசாவும் கூறியிருக்கின்றார். அதை விடுத்து தொடர்ந்தும் காலத்தை நீட்டிக் கொண்டு போனால் தொங்கு ஆட்சியாக எந்தவிதஅதிகாரமும் இல்லாமல் இருக்கும் அரசிடம் நாம் எதனையுமே எதிர்பார்க்க முடியாது.

ஆகவே ஒரு இந்த டிசம்பருக்குள்ளே முக்கியமான இந்த விடயங்களையாவது தீர்வு கண்டு தாங்கள் உண்மையாக விசுவாசமாக அர்பணிப்புடன் இருக்கிறோம் என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்வதற்காக இந்தக் காலஎல்லையை எமதுகட்சியினர் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதை வழமையாக சில பத்திரிகைகள் நக்கல் நகைச்சுவையாகப் போடுவதுண்டு. ஆனால் அரசியலே நம்பிக்கையின் ஊடான எதிர்ப்பார்ப்புத் தான்.

ஆகவே அந்த நம்பிக்கையின் அடிப்படையில் பிரதமரும் செய்யலாம். அவர் தலைமையிலான இந்தஅரசாங்கம் செய்யலாம். அவ்வாறு செய்ய முடியாது என்றில்லை. சிறைக்கைதிகளை விடுவிப்பதில் என்னபிரச்சனை இருக்கிறது. ரணில் விக்கிரமசிங்கவின் கட்சியைச் சார்ந்தவர் தான் நீதிஅமைச்சர். ஆனால் அவர் அரசியல் கைதிகள் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார். அதை நாங்கள் பார்த்தக் கொண்டிருக்கிறோம். இதையயெல்லாத்தையும் தொடர்ந்தும் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கேலாது.

ஆகையால் தான் ஒரு காலஎல்லையை எங்களுடைய கட்சி நிர்ணயித்திருக்கிறது. அவ்வாறு அவர்கள் அதை செய்யவில்லை என்றால் இந்தக் காலஎல்லை முடிவடைவதற்குள் நாங்கள் எங்கள் அணுகுமுறையை நிச்சயமாக மீள்பரிசீலனை செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. ஆனபடியால் நாங்கள் தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் அடிவருடிகளாக அல்லதுஅதற்குப் பின்னாள் போகின்றவர்களாக இருப்போம் என்றுநினைத்தால் அது தவறு. அப்படி நடக்கிற காரியமும் அல்ல.

தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் எங்களுக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றுதான். பண்டாரநாயக்கவும் – ட்டலி சேனாநாயக்கவும் ஒன்றுதான். இது தந்தை செல்வநாயகம் எடுத்த முடிவு. ஆக தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியைத் தான் நாங்கள் ஆதரித்துக் கொண்டிருப்போம் கண்ணைமூடிக் கொண்டிருப்போம் என்று இந்த அரசாங்கம் நினைத்தால் அது தவறான விசயம். முரண்பாடான ஒரு நிலைப்பாடு உருவாகும். எங்களுடைய தலைவர் மாவை குறிப்பிட்டதுபோல இந்தக் காலத்தில் செய்யக் கூடியதை செய்து காட்டினால் ஒரு நம்பிக்கை ஏற்படும் என்பதுதான் என்னுடையநிலைப்பாடாகும் என்றார்.


Recommended For You

About the Author: ஈழவன்