கமல்ஹாசனை அடுத்து சூர்யாவுக்கு ஆதரவளித்த மற்றொரு அரசியல் தலைவர்

நடிகர் சூர்யா சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார்.

எதிர்கால சந்ததியினர் கற்கும் கல்வியான புதிய கல்வி கொள்கை குறித்து அவர் பல கேள்விகளை எழுப்பினார்.

அவர் எழுப்பிய கேள்விகளுக்கு இன்னும் ஒரு அரசியல்வாதி கூட பதிலளிக்கவில்லை. ஆனால் ‘அரைவேக்காடு’ என கடுமையான வார்த்தைகளால் ஒருசில அரசியல்வாதிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

அதே நேரத்தில் சூர்யாவுக்கு ஆதரவாகவும் சில அரசியல்வாதிகளும் திரையுலக பிரபலங்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் சீமான், திமுகவின் நாஞ்சில் சம்பத், மக்கள் நீதி மய்யம் கட்சியின் கமல்ஹாசன், இயக்குனர் பா.ரஞ்சித், அமீர் உள்பட பலர் சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு அளித்தனர்.

இந்த நிலையில் தற்போது சூர்யாவுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் ஆதரவு அளித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் நடிகர் சூர்யாவின் கருத்து நியாயமானது என்று அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியுள்ளார்.


Recommended For You

About the Author: Editor