தமன்னாவின் அடுத்த படத்தின் டைட்டிலில் டாப்சி

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளான நயன்தாரா, த்ரிஷா, தமன்னா, அஞ்சலி உள்பட பலர் திகில் படங்களில் நடித்து வரும் நிலையில் தமன்னா ஏற்கனவே ‘தேவி’, ‘தேவி 2’ ஆகிய திகில் படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் ‘அதே கண்கள்’ இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் தமன்னா ஒரு திகில் படத்தில் நடித்து வருகிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்த படத்தின் டைட்டில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் டைட்டிலை நடிகை டாப்சி இன்று மாலை ஆறு மணிக்கு தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடவுள்ளார்.

தமன்னாவுடன் யோகிபாபு, முனிஷ்காந்த், மன்சூர் அலிகான் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.

டேனி ரெய்மண்ட் ஒளிப்பதிவில் லியோ ஜான்பால் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.


Recommended For You

About the Author: Editor