கவின் – சாக்சி காதலுக்கு கைகொடுக்கும் லாஸ்லியா!

கடந்த இரண்டு நாட்களாக பிக்பாஸ் வீட்டில் காதல் பஞ்சாயத்து நடந்து வருவது தெரிந்ததே. கவின் சாக்சியை லவ் பண்ணுகிறாரா? அல்லது லாஸ்லியாவை லவ் பண்ணுகிறாரா? என்று கவினுக்கே தெரியவில்லை.

தற்போது திடீரென இரண்டு பேர்களும் கவினுடன் சண்டை போட்டதால் கவின் அப்செட்டில் இருக்கின்றார்.

இந்த நிலையில் இந்த முக்கோண காதலுக்கு முடிவு கட்ட எண்ணிய லாஸ்லியா, சாக்சியிடம் கவின் காதலை ஏற்று கொள்ளுமாறும், தனக்கு கவினுடன் காதல் இல்லை என்றும், அவனை தனக்கு பிடிக்கும் ஆனால் அது லவ் இல்லை என்றும், நீங்கள் இருவரும் இணைந்தால் தனக்கு சந்தோஷம் என்றும் கூறுகிறார். இதனை சாக்சி ஏற்றுக்கொண்டது போல் தெரிவதால் விரைவில் கவின் – சாக்சி காதல் சக்சஸ் ஆகும்போல் தெரிகிறது.

ஆனால் இன்றைய புரமோவில் சாக்சியும், மீராமிதுனும் ஜெயிலில் இருக்கின்றனர். இருவரும் எதற்காக ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம்


Recommended For You

About the Author: Editor