கடுப்பேற்றிய சாக்சி, குத்தி கொலை செய்த லாஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரமோ வீடியோவில் கிச்சன் டீமில் உள்ள சாக்சி, இதய வடிவில் ஒரு சப்பாத்தி செய்து அதனை லாஸ்லியாவிடம் காண்பித்து, ‘லாஸ் உன் பிரதருக்கு போட்ட ஹார்ட்டை பார்த்தியா? என்று கேட்டு கடுப்பேத்துகிறார். இதனால் ஆத்திரம் அடைந்த லாஸ்லியா, அந்த சப்பாத்தியை கத்தியால் குத்துகிறார்.

இதனால் சாக்சி அதிர்ச்சி அடைய, ஷெரின் லாஸ்லியாவை திட்டுகிறார். இதனையடுத்து லாஸ்லியாவிடம் தர்ஷன் ‘இப்படி செய்யாதே என்று கூற அதற்கு லாஸ்லியா, ‘நான் அப்படித்தான் செய்வேன், இன்னொரு சப்பாத்தி போட்டால் அதையும் குத்துவேன்’ என தனக்கே உரிய செல்ல மொழியில் கோபமாக கூறுகிறார்.

ஏற்கனவே கவின், லாஸ்லியா, சாக்சி ஆகிய மூவருக்கும் இடையே கடந்த இரண்டு நாட்களாக சண்டை மூண்டு வரும் நிலையில் இன்றைய சப்பாத்தி மேட்ட இன்று முழுவதும் பிரச்சனை ஆகும் என்றே தெரிகிறது


Recommended For You

About the Author: Editor