அக்சராஹாசனின் கர்ப்பத்திற்கு உதவிய அம்மா

உலகநாயகன் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்சராஹாசன், அஜித்தின் ‘விவேகம்’ படத்தில் ஹேக்கராக நடித்த பின் அவர் தனது இரண்டாவது படமான விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’ என்ற படத்தில் கர்ப்பிணியாக நடித்துள்ளார்.

ஒரு இளம் நடிகை அதுவும் இரண்டாவது படத்திலேயே கர்ப்பிணி வேடம் ஏற்று நடிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல

கர்ப்பிணி வேடத்தில் நடித்தது குறித்து அக்சராஹாசன் கூறுகையில், ‘இந்த படத்தின் திரைக்கதை தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் வாயந்ததாக இருந்தது.

எதையுமே புதுமையை விரும்பும் தனக்கு இந்த கேரக்டர் ஒரு சவாலாக இருந்ததால் தான் இந்த கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டேன்’ என்று கூறியுள்ளார்

மேலும் ஒரு கர்ப்பிணியின் நடை உடை பாவனையை அப்படியே திரையில் கொண்டுவர வேண்டுமென்றால் தகுந்த பயிற்சி வேண்டும் என்பதற்காக தனது அம்மாவிடம் அவர் இது குறித்து பயிற்சி எடுத்ததாகவும், அவருடைய ஆலோசனையின்படியே கர்ப்பிணி வேடத்தில் நடித்ததாகவும் அக்சராஹாசன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்

விக்ரம், அக்சராஹாசன், நடிப்பில் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கடாரம் கொண்டான்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: Editor