கோவில்களில் கொள்ளை அடித்த இலங்கை அமச்சர்

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் வெள்ளவத்தை மயூராபதி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலிடமிருந்து 20 மில்லியன் ரூபா தொகையை கடனை பெற்றுள்ள நிலையில், குறித்த கடன் தொகையை மீண்டும் திருப்பி செலுத்தாமையின் காரணமாக ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில் அறங்காவலர்கள் நிதி குற்றப் புலனாய்வு பிரிவில் (FCID) முறைப்பாடு செய்துள்ள நிலையில், சுவாமிநாதன் அவர்கள் பல்வேறு தரப்பினர் மூலம் FCIDக்கு அச்சுறுத்துவதாக குறிப்பிடப்படுகிறது.

சுவாமிநாதனுக்கு சொந்தமான ஸ்ரீ பொன்னம்பல வாணேஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தை கட்டுவதற்காக 2014 அக்டோபர் 10 ஆம் திகதி இந்த கடன் பெறப்பட்டுள்ளது.

பத்து மாதங்களுக்குள் கடனை திருப்பித் தருவதாக சுவாமிநாதன் உறுதியளித்துள்ள நிலையில் அவர் கடனை திருப்பி செலுத்துவதில் இழுபறித்துள்ள நிலையில் மயூராபதி கோவில் அறங்காவலர்கள் சட்டத்தின் உதவியை நாடியுள்ளனர்.

இதற்கமைய சுவாமிநாதனின் தரப்பினரால் மயூராபதி கோவிலுக்கும், FCIDயிற்கும் இப்போது தலையிடி நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 20 மற்றும் ஏப்ரல் 10ம் திகதிகளில் மயூராபதி கோவிலினால் சுவாமிநாதனுக்கு நினைவூட்டல் கடிதங்கள் இரண்டு அனுப்பப்பட்டுள்ளது.

சுவாமிநாதனின் வழக்கறிஞர் கபில மானவசிங்க சரத்சந்திர கடந்த மே மாதம் 10 ஆம் திகதி மயூராபதி கோவில் அறக்கட்டளையின் தலைவர் சுந்தரலிங்கத்திற்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார்.

பணம் செலுத்துவதைக் குறிக்கும் இரண்டு கடிதங்களையும் தள்ளுபடி செய்யுமாறு தனது வாடிக்கையாளரிடமிருந்து அறிவுறுத்தல்களைப் பெற்றதாக வழக்கறிஞர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தனது வாடிக்கையாளர் மீது ஏதேனும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால், மயூராபதி கோவில் அறக்கட்டளை மீது வழக்கு தொடரப்படும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் பொறுப்பான அமைச்சராகவும், மக்கள் பிரதிநிதியாகவும், சுவாமிநாதன் நம்பகமான நிலையில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பின் ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான சுவாமிநாதன், இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றதுடன்,பின்னர் நீதிமன்றத்தில் வழக்கறிஞரானார்.

நாட்டின் முக்கிய மற்றும் புகழ்பெற்ற தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த சுவாமிநாதன், அருணாசலம் பொன்னம்பலத்தின் பேரனாவார்.

அத்தகைய புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட ஒரு குடும்பத்திலிருந்து வரும் சுவாமிநாதன் இப்போது குடும்பத்தை இழிவுபடுத்துகிறார்.

அத்தகைய பின்னணி இருந்தபோதிலும், அவர் தனது மத திருத்தலத்திற்கே பங்கம் விளைவித்துள்ளார்.

புகழ் பெற்ற புண்ணிய தளத்தில் இருந்து இத்தகைய நிதி குற்றச்சாட்டை பெற்றிருப்பது இந்து மத விவகார அமைச்சர் என்ற ரீதியில் சுவாமிநாதன் போன்ற ஒரு நபருக்கு நியாயமாகுமா?

எனவே, திரு. சுவாமிநாதன் ஒரு நேரடி முடிவை எடுத்து தவறை சரிசெய்ய வேண்டும் என்பது எங்கள் கருத்து.

திரு. சுவாமிநாதன் தெளிவுபடுத்த விரும்பினால், அதற்கான நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்வோம் என தெரியப்படுத்துகிறோம்.


Recommended For You

About the Author: Editor