ரயில் பாதை ஒப்பந்தம் கைச்சாத்து!!

91.26 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் மஹவையில் இருந்து ஓமந்தை வரை ரயில் பாதையை அமைக்கும் ஒப்பந்தம் இர்கோன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் மற்றும் அரசாங்கத்திற்கு இடையே கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தில் இர்கோன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சுனில் குமார் சவுத்ரி மற்றும் இலங்கையின் போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஜெயம்பதி ஆகியோர் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அர்ஜுன ரணதுங்க முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) கையெழுத்திட்டனர்.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

இந்தியாவின் குறித்த நிதியுதவியுதவித் திட்டத்தின் கீழ் மஹோ முதல் ஓமந்தை வரையில் 128 கிலோமீற்றர் தூரம் கொண்ட ஆகக்கூடிய எடைகளைத் தாங்கக்கூடிய ரயில் பாதையை அமைக்கப்படவுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ரயில் பாதையின் வேக திறனை தற்போதைய வேகத்தை விட மணிக்கு 60 கி.மீ முதல் 120 கி.மீ வரை இரட்டிப்பாக்குவதோடு, பராமரிப்பு செலவுகளையும் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த ரயில் பாதை 100 ஆண்டுகளில் மேம்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor