வைத்தியர் சாபிக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்படவில்லை!!

கைது செய்யப்பட்டுள்ள வைத்தியர் சேகு ஷிஹாப்தீன் மொஹமட் சாபிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் முகமாக மருத்துவ பரிசோதனைகளுக்கு ஆஜராக பெண்கள் தவறிவிட்டனர்.

சட்டவிரோத கருத்தடை செய்யப்பட்டதாகக் கூறும் பெண்களை கேஸ்டல் ஸ்ட்ரீட் வைத்தியசாலை டி சொய்சா மகப்பேறு வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனை செய்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது.

எவ்வாறாயினும், இந்த பரிசோதனையை மேற்கொள்வதற்கு ஒதுக்கப்பட்ட இரண்டு வைத்தியசாலைகளில் ஒரு பெண் கூட இதுவரை பரிசோதனைக்கு வரவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

40 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட சொத்துக்கள் சேகு ஷிஹாப்தீன் மொஹமட் சாபி வசமுள்ள சந்தேகத்திற்கிடமான முறையில் அதிகளவு சொத்து வைத்திருந்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் குருணாகல் வைத்தியசாலையின் மருத்துவர் செய்கு சியாப்தீன் மொஹம்மட் ஷாபி சி. ஐ. டி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் 8,000 சிசேரியன் மகப்பேறுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அதில் 4,000 பௌத்த பெண்களுக்கு சிசேரியனுடன் கருத்தடை செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டு சி. ஐ. டியினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor