சோபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை – பிரதமர் !!

அமெரிக்காவுடனான உத்தேச படைகளின் அந்தஸ்து (சோபா) ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடம் தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணிகள் சங்கத்தினருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று (புதன்கிழமை) அலரிமாளிகையில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் இந்த சந்திப்பில் சட்டத்தரணிகள் சங்கத்தினர் சோபா உடன்படிக்கை தொடர்பிலும், மிலேனியம் சவால்கள் ஒப்பந்தம் மற்றும் காணி விசேட திருத்தச்சட்டம் குறித்து பிரதமரிடம் கலந்துரையாடினர்.

சோபா உடன்படிக்கையினூடாக அமெரிக்கா இராணுவத்தை இலங்கைக்கு கொண்வர அரசாங்கம் முயற்சித்து வருகின்றதாகவும் காணி விசேட திருத்த சட்டம் மற்றும் மிலேனியம் சவால்கள் கூட்டு ஒப்பந்தத்தினூடாக நாட்டின் காணி வளத்தையும் அமெரிக்காவுக்கு வழங்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக பலதரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலைமையிலேயே இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினர் பிரதமருடன் பேச்சுவார்ததை நடத்தியுள்ளனர். இந்த கலந்துரையடலில் நீதி அமைச்சர் தலதா அதுகோரல மற்றும் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உட்பட பலர் கலந்துக்கொண்டனர்


Recommended For You

About the Author: Editor