ஈரான் எரிபொருள் கடத்திய கப்பலை கைப்பற்றியது!!

வளைகுடாவில் எரிபொருளைக் கடத்திய வெளிநாட்டுக் கப்பலொன்றை அதன் 12 பணியாளர்களுடன் கைப்பற்றியதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானின் புரட்சிகர காவலர் படையை மேற்கோள் காட்டி ஈரானிய அரச தொலைக்காட்சி நேற்றையதினம் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் எந்த நாட்டுக் கப்பல் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்கப்பலில் ஒரு மில்லியன் லிட்டர் (220,000 கலன்) எரிபொருளைக் கடத்திச் சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஈரானிய எண்ணெய்க் கடத்தல்காரர்களிடமிருந்து வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு கப்பலில் எரிபொருள் எடுத்துச் சென்றவேளையில் , ஈரானின் லராக் தீவின் தெற்கே ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸைத் தளமாகக் கொண்ட வெளிநாட்டுக் கப்பலொன்று ஞாயிற்றுக்கிழமை ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணித்தபோது ஈரானின் புரட்சிகர காவலர் படை ஈரானிய கடற்பகுதிக்குள் கப்பலை இழுத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor