கட்டுவப்பிட்டி தேவாலயம் மீண்டும் திறக்கப்படுகின்றது!

பயங்கரவாதத் தாக்குதலின் போது கடுமையாக சேதமடைந்த நீர்கொழும்பு, கட்டுவப்பிட்டி தேவாலயம் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தேவாலயம் எதிர்வரும் 21ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கொழும்பு துணை ஆயர் அந்தோணி ஜெயகோடி தெரிவித்துள்ளார் என தமிழ் அருள் செய்தியாளர் தெரிவித்தார்.

தாக்குதல்களினால் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்கள் சார்பாக இதன்போது திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் ஆராதனைகளின் போது நாட்டின் சில பகுதிகளிலுள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை இலக்கு வைத்து பயங்கரவாதத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது நீர்கொழும்பு, கட்டுவப்பிட்டி தேவாலயத்திலும் பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர். இதன்போது குறித்த தேவாலயம் கடுமையாக சேதமடைந்திருந்தது.

இந்தநிலையில் குறித்த தேவாலயத்தில் கடந்த மாதம் முதல் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 


Recommended For You

About the Author: Editor