கன்னியாவில் தேநீர் ஊற்றியமை தொடர்பில் விசாரணை

திருகோணமலை-கன்னியா பிள்ளையார் கோவிலுக்கு பௌர்ணமி  தினமான செவ்வாய்க்கிழமை (16) வழிபடச்  சென்ற பக்தர்கள் மீது இனந்தெரியாதவர்கள் தேநீர் சாயங்களை ஊற்றிய சம்பவம் தொடர்பில் இருவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேநீர் சாயங்களை ஊற்றியதாக உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் யாரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்றும், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.


Recommended For You

About the Author: ஈழவன்