நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு வலியுறுத்து!!

ஜனாதிபதித் தேர்தல்களை தாமதமின்றி நடத்த முடியாவிட்டால் நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

இன்று (வியாழக்கிழமை) கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தலை பிற்போட அரசு முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

மாகாண சபை தேர்தலை இந்த அரசாங்கம் எவ்வாறு பிற்போட்டதோ அதேபோன்றே ஜனாதிபதி தேர்தலையும் பிற்போட முயற்சிக்கின்றது என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நொவெம்பர் 08 முதல் டிசெம்பர் 08 க்குள் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவதற்கான சாத்தியத்தை தலைவர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிராகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor