கன்னியா விவகாரம் ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் கூட்டமைப்பு பங்கேற்கவில்லை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கன்னியா விவகாரம் உள்ளிட்ட அவசர பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் தலைமைகள் கலந்துரையாடியிருந்தனர்.எனினும் இந்த கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பங்கேற்கவில்லை.

தமிழர் பகுதிகளில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றமை தொடர்பாக ஜனாதிபதியுடன் இன்று முற்பகல் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் அமைச்சர்களான மனோ கணேசன், திகாம்பரம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான வியாழேந்திரன், வேலுகுமார், திலகர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்

கன்னியா நீராவியடி, கந்தப்பளை உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor