‘ரியல் சிங்கம்’!!

கமிஷனர் மெரின் ஜோசப்பின் இந்தக் கைது நடவடிக்கையை கேரள மக்கள் வெகுவாகப் பாராட்டிவருகின்றனர்.

கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சொந்த ஊராகக் கொண்டவர், 38 வயதான சுனில் குமார். இவர், தற்போது சவுதி அரேபியாவில் டைல்ஸ் செய்யும் வேலை செய்துவருகிறார்.

2017-ம் ஆண்டு, விடுமுறை நாள்களைக் கழிப்பதற்காகச் சொந்த ஊருக்கு வந்த சுனில், தன் நண்பரின் உறவினர் பெண்ணை மூன்று மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

யதான அந்தச் சிறுமி, முதலில் இந்த விஷயத்தைத் தன் பெற்றோர்களிடம் கூற பயந்துள்ளார். பின்னர், சில மாதங்கள் கழித்தே குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் காவலர்களை அணுகியுள்ளனர். அதற்குள் சுனில் சவுதிக்குச் சென்றுவிட்டார். சுனில் குமாரை தேடப்படும் நபராக அறிவித்தது கேரள காவல்துறை.

இந்த வழக்கில், கேரள போலீஸால் பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், சிறுமியின் வழக்கை மகிளா நீதிமன்றத்துக்குக் கொண்டுசென்றுள்ளனர் பெற்றோர். இந்தச் சமயத்தில், சுனிலைத் தன் குடும்பத்துக்கு அறிமுகம் செய்துவைத்த சிறுமியின் மாமா, தற்கொலை செய்துகொண்டார். இவரைத் தொடர்ந்து, 2017-ம் ஆண்டில் சிறுமியும் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துவிட்டார்.

இவர்கள் இருவரது இறப்புக்குப் பிறகு, சிறுமியின் பெற்றோர் இந்த வழக்கில் எந்த ஆர்வமும் காட்டாமல் இருந்துள்ளனர். அதேபோல், கேரள காவல்துறையும் இந்த வழக்கை முடிக்காமல் அப்படியே விட்டுவிட்டது. இந்நிலையில், கடந்த மாதம் கொல்லம் பகுதியின் புதிய காவல்துறை கமிஷனராக மெரின் ஜோசப் என்ற பெண் அதிகாரி பொறுப்பேற்றார். அவர் பதவியேற்ற பிறகு, தன் கட்டுப்பாட்டுப் பகுதியில் நிலுவையில் உள்ள வழக்குகளை ஆராயத் தொடங்கினார். குறிப்பாக பெண்கள், குழந்தைகள் தொடர்பான வழக்குகளை மீண்டும் தூசுதட்டினார்.

விடுமுறை இல்லாத காலண்டர் அச்சடிக்க மாட்டார்களா?’ – ஐந்து வயது மகளுக்காக உருகும் கேரள போலீஸ்!
“ நான் இந்த வழக்கை எடுத்துப் படித்தேன். அப்போதுதான் தெரிந்தது, குற்றவாளி இரண்டு ஆண்டுகளாகத் தலைமறைவாக இருக்கிறார் என்பது. கேரள காவல்துறையின் சர்வதேசப் புலனாய்வு அமைப்புதான் இந்த வழக்கு தொடர்பாக சவுதி காவலர்களிடம் தொடர்பில் உள்ளது. நாங்கள் இந்த வழக்கின் மீதான பணிகளை வேகப்படுத்தி, குற்றவாளியைக் கைது செய்துள்ளோம்” என மெரின் ஜோசப் தெரிவித்துள்ளார்.

இங்கிருந்து சவுதிக்குச் சென்று குற்றவாளியைக் கைதுசெய்ய வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டபோது, பிற அதிகாரிகள் யாரையும் அனுப்பாமல், நேரடியாகத் தானே களத்தில் இறங்கியுள்ளார். இந்த வழக்கிற்காக மெரினும் அவரது குழுவும் நிறையப் பணிகளை மேற்கொண்டு பல திடங்களைத் தீட்டியுள்ளனர். சிபிஐ உதவி, குற்றவாளியைக் கைதுசெய்ய அனுமதி போன்ற அனைத்து ஆவணங்களையும் தயார்செய்து, சரியான நடைமுறையில் கைதுசெய்துள்ளார். ‘ சிங்கம்’ படத்தில் வரும் நடிகர் சூர்யாவின் கதாபாத்திரம் போல் இவர் வெளிநாடு சென்று குற்றவாளியைக் கைதுசெய்து வந்துள்ளார். இவர்தான் `ரியல் சிங்கம்’ என நெட்டிசன்கள் புகழ்ந்துவருகின்றனர்.


Recommended For You

About the Author: Editor