இலங்கையில் கொரோனாவால் சீல் வைக்கப்பட்ட கிராமம்!

களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டுலுகம கிராமத்தில் டுபாயிலிருந்து வந்த நபர் ஒருவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை மேற்கொள்ளாமல் அஜாக்கிரதையாக இருந்துள்ளார்.

குறித்த நபருக்கு கொரோனாத் தொற்று இருப்பது கடந்த 26 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்த கிராமத்தில் உள்ளவர்களுக்கும் கொரோனா ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதனால் குறித்த கிராமம் மொத்தமாக சீல் வைக்கப்பட்டுள்ளது.

படங்கள் – லங்காதீப ஊடகம்


Recommended For You

About the Author: Editor