கொழும்பு புறநகர்ப்பகுதியில் சிறுமிகள் தாயாகும் அவலம்!!

இலங்கையின் தலைநகர் கொழும்பை அண்மித்த மொரட்டுவ பிரதேசத்தில் சிறு வயதிலேயே மகப்பேற்றை அடைந்த 77 சிறுமிகளது விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

குடும்பநல சுகாதார பிரிவு ஊடாக சுகாதார அமைச்சு இந்த தகவலை திரட்டியிருக்கின்றது.

இதற்கமைய கடந்த வருடத்தில் மாத்திரம் மொரட்டுவ பிரதேசத்தில் சிறு வயதிலேயே தாய்மையை அடைந்த 77 பேர் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றனர்.

இவர்களில் 54 பேர் மொரட்டுவ அங்குலான என்கிற பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்பப் பின்னணி, பாடசாலை கல்வியை இடைநடுவே கைவிட்டு திருமணத்தில் நுழைந்தவர்கள், பாடசாலை காலத்திலேயே கர்ப்பம் தரித்தவர்கள் எனப் பலர் பலவிதமான காரணங்களை கூறியிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

இதேவேளை இந்த வருடத்தின் கடந்த 06 மாதங்களில் மட்டும் குறித்த பகுதியில் 30க்கும் மேற்பட்ட சிறுவயது தாய்மார்கள் பதிவாகியிருப்பதுவும் இங்கு சுட்டிக்காட்டக்கதாகும்.


Recommended For You

About the Author: Editor