கட்டுநாயக்கவில் தரையிறங்கிய 3 சர்வதேச விமானங்கள்!

இலங்கையில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், இன்று மூன்று விமானங்கள் அவசரமாக தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்துள்ள வெளிநாட்டவர்களை தமது நாடுகளுக்கு அழைத்துச் செல்ல ரஷ்யா மற்றும் சுவிஸர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து மூன்று விமானங்கள் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.

இந்த விமானங்கள் இலங்கையில் ஹோட்டல்களில் தங்கியிருக்கும் தமது நாட்டுப் பயணிகளை அழைத்துச் செல்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தமது நாடுகள் விடுத்திருந்த அழைப்புக்கு இணங்க பெருந்தொகையான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இன்று விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.

இதேவேளை இலங்கை வந்துள்ள சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்ல நேற்று மாலையும் விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தது.

அதேவேளை ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor