2 நாட்களில் பாரிஸில் நெருக்கடி – நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்!!

எதிர்வரும் 48 மணி நேரத்துக்குள் பாரிஸ் மற்றும் அதனை சூழவுள்ள வைத்தியசாலைகளில் நெருக்கடி நிலை அதிகரிக்கும் என பிரான்ஸ் வைத்தியசாலை குழுமத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

சடுதியாக அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்நிலை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த வைரஸ் பரவல் அதிகரிப்பானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும் எனவும் அதிர்ச்சித்தகவலை வெளியிட்டுள்ளார்.

பிரான்சில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29155 ஆக அதிகரித்துள்ளதுடன், குறித்த நோயாளர்களில் 1300 பேர் தற்பொழுது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1696ஆக காணப்படுகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள கொரோனா கண்காணிப்பு குழுவின் பிரதம வைத்தியர், பாரிஸ் பகுதியில் நோய் பரவலை கட்டுப்படுத்த தமக்கு நிச்சயமாக உதவி தேவை எனவும், ஏனெனில் பிரான்சின் கிழக்கு பகுதிகளில் காணப்படும் அபாயகரமான நிலை பாரிஸ் மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கும் பரவி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்து வரும் 24 அல்லது 48 மணி நேரத்தில், நாம் மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளை மட்டுமே கொண்டிருப்போம் எனவும், பிராந்தியங்கள், வைத்தியசாலைகள் மற்றும் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு இடையிலான தனிமைப்படுத்தல்களை மேற்கொள்வது குறித்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மிக அவசியமானது என்பதை அக்காலப்பகுதியில் தாம் வெளிக்காட்ட நிர்ப்பந்திக்கப்படுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor