உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கும் ஆரோக்கியத்தைக் கடைப்பிடிக்க 5 வழிகள்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் இதுவரை 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 5 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நெருக்கடி காலத்தில் ஆரோக்கியத்தைக் கடைப்பிடிப்பதற்கான 5 வழிமுறைகளை உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் ரெட்ரோஸ் அதனொம் (Tedros Adhanom) அறிவுறுத்தியுள்ளார்.

மன மற்றும் உடல் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க சத்துமிக்க உணவு முறையைப் பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள ரெட்ரோஸ், மதுவைத் தவிர்த்து, சர்க்கரை அதிகம் உள்ளவற்றைக் குடிப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், புகை பிடிப்பதை முற்றிலும் நிறுத்த வேண்டும் எனவும் அதிகமாக புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் மேலும் பல நோய்களை உருவாக வாய்ப்புள்ளதாகவும் அவர் விளக்கியுள்ளார்.

நாள் ஒன்றுக்கு 30 நிமிடம் உடற்பயிற்சி செய்வதை உலக சுகாதார மையம் பரிந்துரைப்பதாக தெரிவித்துள்ள ரெட்ரோஸ், மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, நம்பகத்தன்மை உள்ளவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.


Recommended For You

About the Author: Editor