ஈரானில் 2000 படுக்கையுடன் தற்காலிக மருத்துவமனை திறப்பு!

மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா அச்சுறுத்தலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஈரானில் 2 ஆயிரம் படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை ஒன்றினை இராணுவத்தினர் திறந்துள்ளனர்.

தெஹ்ரான் சர்வதேச கண்காட்சி மையத்தை இவ்வாறு 2 நாட்களில் மருத்துவமனையாக இராணுவ வீரர்கள் மாற்றியமைத்துள்ளனர்.

லேசான கொரோனா அறிகுறி உள்ளவர்கள், சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களுக்காக இந்த மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.யூ, சத்திர சிகிச்சை அறை, மருத்துவ சாதனங்கள் பொருத்தப்பட்ட ஆய்வகம் என அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ள இந்த மருத்துவமனை மூன்று தனிமைப்படுத்தப்பட்ட மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor