மரக்கறிகளுக்கும் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்!!

சகல மரக்கறி வகைகளுக்குமான அதிகூடிய சில்லறை விலையை பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபை நிர்ணயித்துள்ளது.

அந்தவகையில் மரக்கறி கிலோ ஒன்று சந்தைகளில் விற்பனை செய்யக் கூடிய அதிகபட்ச விலைகள் வருமாறு,

கரட் ரூ. 150 -180

லீக்ஸ் ரூ. 120

போஞ்சி ரூ. 120

கோவா ரூ. 100

பீட்ரூட் ரூ.80

கறி மிளகாய் ரூ. 150

தக்காளி ரூ. 100

வெண்டிக்காய் ரூ. 70

வாழைக்காய் ரூ. 70

பச்சை மிளகாய் ரூ. 200

கத்தரிக்காய் ரூ. 100

நோகோல் ரூ. 60

பாகற்காய் ரூ. 100

வெங்காயத்தாள் ரூ. 100

பட்டானா ரூ. 80

வெள்ளரிக்காய் ரூ. 50

கார்கின் ரூ. 50

புடலங்காய் ரூ. 70

தேசிக்காய் ரூ. 150

ரேந்த அவரை ரூ. 70

இஞ்சி ரூ. 150

வற்றாளை கிழங்கு ரூ. 60

பீக்கங்காய் ரூ. 80

பயத்தங்காய் ரூ. 60

ராபு கிழங்கு ரூ. 40

சில்லறை வியாபாரிகள் (உள்ளூர் கடைகள்) அனைத்து மரக்கறிகளையும் அதன் மொத்தத் விலையை விட அதிக பட்சமாக ரூபா 40 மேலதிகமான விலைக்கு விற்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உதாரணம்: பீட்ரூட்டுக்கான அதி கூடிய சில்லறை விலை : 80+40 = ரூபாய் 120

மேலும் இதன் பின்னரும் மரக்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களுக்கு எதிராக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையானது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor