ஒலுவில் பகுதியிலும் கொரோனா சிகிச்சை நிலையம்!

அம்பாறை மாவட்டம் ஒலுவில் துறைமுகப் பகுதியில் சுமார் 80 பேர் தங்கி சிகிச்சை பெறக்கூடிய தனிமைப்படுத்தப்பட்ட மத்திய நிலையம் ஒன்றை கடற்படையினரின் உதவியுடன் ஆரம்பிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

அம்பாறையில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில்,  “தற்போது எமது பிராந்தியத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைவாகக் காணப்பட்ட போதிலும் எமது சுகாதார நடைமுறைகள் தீவிரமான முறையில் கடைப்பிடிக்கப்படுகின்றது.

அந்த வகையில் எதிர்காலத்தில் வைரஸின் தாக்கம் எமது பிரதேசத்தில் அதிகரிக்கும் பட்சத்தில் அதற்காக இலங்கை கடற்படையினரின் உதவியுடன் எமது பூரண ஆதரவுடன் ஒலுவில் துறைமுகப் பகுதியில் சுமார் 80 பேர் தங்கி சிகிச்சை பெறக்கூடிய தனிமைப்படுத்தப்பட்ட மத்திய நிலையம் ஒன்றை ஆரம்பிக்க இருக்கின்றோம்.

தேவையேற்படின் மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” எனக் கூறினார்.


Recommended For You

About the Author: Editor