கொரோனா சிகிச்சை மையம் புத்தளத்திலும்!!

புத்தளம் இரணவில பகுதியில் கொரோனா சிகிச்சை மையம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.

400 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள வொய்ஸ் ஒவ் அமெரிக்கா பரிமாற்ற நிலையம் தற்போது இயங்காமல் உள்ளது.

இந்த நிலையில் அங்குள்ள கட்டிடங்களில் சிகிச்சை மையம் அமைக்கலாமென ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து, இராணுவத்தளபதி, சுகாதார அமைச்சர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று குறித்த இடத்தினை ஆய்வு செய்தனர்.

குறித்த இடத்தில் 50 கெரோனா நோயாளிகளிற்கு சிகிச்சையளிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இதற்கான கட்டுமான வேலைகளில் இராணுவ பொறியியல் பிரிவு ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


Recommended For You

About the Author: Editor