சிறைகளில் வேகமாகப் பரவும் கொரோனா

பிரான்சின் சிறை நிர்வாகத்தில் பணிபுரியும் ஐம்பதிற்கும் மேற்பட்டவர்களிற்கும், 21 சிறைக்கைதிகளிற்கும், COVID-19 இன் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பல நூற்றுக்கணக்கானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனப் பிரான்சின் சிறைகளின் நிர்வாக இயக்குநரகமான DAP (Direction de l’administration pénitentiaire) தெரிவித்துள்ளது.
பிரான்சின் பல சிறைகளில் தொற்றுக்கள் இரட்டிப்பாவதாக சிறை நிர்வாகம் எச்சரித்துள்ளது.
பிரான்சின் சிறை நிர்வாகத்தில் பணிபுரியும் 42.000 பேரில் ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் தொற்றிற்கு உள்ளாகி இருக்கம் நிலையில், 793 அதிகாரிகள் உடனடியாகத் 14 நாட்களிற்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
78 பேர் 14 நாட்கள் தனிமையிலிருந்து வெளியே வந்தள்ளனர் எனவும் DAP தெரிவித்துள்ளது

Recommended For You

About the Author: Editor