வடக்கு மாகாண மக்களுக்கு குமார் சங்கக்கார நிதியுதவி

வடக்கு மாகாண மக்களுக்காக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண மக்களுக்காக நிதியுதவி வழங்கியுள்ளார்.

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் குமார் சங்கக்கார 1.6 மில்லியன் ரூபாய் நிதியை வழங்கிவைத்தார். பத்தரமுல்லையிலுள்ள வட மாகாண ஆளுநர் உப காரியாலத்தில் இந்தச்சந்திப்பு இடம்பெற்றது.

இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து குமார் சங்கக்கார கூறுகையில், “எமது நாடு போன்று உலகமே இந்த COVID-19 வைரஸினால் பாதிக்கப்பட்டு மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

எனவே என்னுடன், சாலிய ஒஸ்ட்டின், நாதன் சிவகாமநாதன் மற்றும் எமது நண்பர்கள் சிலர் இணைந்து ஏதேனுமொரு உதவியைச் செய்ய முடியுமாக இருந்தால், அதனை பெரும் பாக்கியமாகக் கருதினோம்.

நாட்டு மக்களுக்கு அநேகமானவர்கள் உதவி செய்கின்றனர். இந்தப் போராட்டத்திற்கு கரம் கொடுக்கின்றனர். அயலவர்களின் நலன் தொடர்பிலும் கவனம் செலுத்துகின்றனர். இதனைத் தொடர்ந்தும் முன்னெடுங்கள். அதேபோன்று, ஆலோசனைகளைப் பின்பற்றுங்கள்” என குமார் சங்கக்கார குறிப்பிட்டார்.


Recommended For You

About the Author: ஈழவன்