பிரித்தானிய பிரதமரையும் தொற்றிய கொரோனா!

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜொன்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானிய இளவரசர் சார்லசுக்கு அண்மையில் கொரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதியாகியிருந்தது. இதையடுத்து ஸ்காட்லாந்தில் அவர் சுயதனிமையில் உள்ளார்.
இந்நிலையில், பிரித்தானிய பிரதமரான பொரிஸ் ஜொன்சனுக்கும் மருத்துவ பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சுயதனிமையில் இருக்கும் அவர், வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரிட்டன் அமைச்சரவையை வழிநடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், ஒரு நாட்டின் பிரதமருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது இதுவே முதன்முறையாகும்.

Recommended For You

About the Author: Editor