கடைக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த முகக்கவசங்கள் மீட்பு.!!

Aubervilliers நகரில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த முகக்கவசங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

Aubervilliers நகரில் உள்ள கடை ஒன்றை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் சோதனையிட்டுள்ளனர்.

அப்போது சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 28,800 முகக்கவசங்களை அவர்கள் மீட்டுள்ளனர். கடைக்குள் பதுங்கியிருந்த விற்பனையாளர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

குறித்த நபருக்கு முகக்கவசங்களை வழங்கிய விநியோகஸ்தர் Pantin நகரில் வசிப்பவர் எனவும், அவரது வீடும் காவல்துறையினரால் சோதனையிடப்பட்டுள்ளது எனவும் அறிய முடிகிறது.

மீட்கப்பட்ட முகக்கவசங்கள் அனைத்தும் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.


Recommended For You

About the Author: Editor