ஈராக்கில் பிரெஞ்சு பணயக்கைதிகள் விடுவிப்பு!

ஈராக்கில் பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த மூன்று பிரெஞ்சு நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஜனவரி 20 ஆம் திகதி இந்த மூன்று நபர்களும் பணயக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். குறித்த மூவரும் SOS Chrétiens d’Orient எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணி புரிபவர்கள் ஆவர். இந்நிலையில், மார்ச் 25 ஆம்  திகதி மூன்று பிரெஞ்சு நபர்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Antoine Brochon, Julien Dittmar, Alexandre Goodarzy ஆகிய மூன்று பிரெஞ்சு நபர்களுமே பணயக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டிருந்தனர். பாக்தாத் நகரில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அறிய முடிகிறது.
அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ள செய்தியினை ஜனாதிபதியின் எலிசே மாளிகை இன்று அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor