கட்டில்கள் இல்லாமல் கைவிடப்படும் கொரோனா நோயாளிகள்.

கொரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் போதிய கட்டில்கள் இல்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.

Garches நகரில் உள்ள Raymond-Poincaré de Garches மருத்துவமனையின் தலைமை மருத்துவர் Djillali Annane, மிகுந்த கவலையுடன் இது குறித்து தெரிவித்தார்.

Hauts-de-Seine மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்க்கு சிகிச்சை அளிக்கும் பிரதான மருத்துவமனையான இங்கு, போதிய கட்டில்கள் இல்லை எனவும், அதேபோல் போதிய தாதிமார், உதவியாளர்கள் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போது 26 பேர் இந்த மருத்துவமனையில் மிகவும் மோசமான உடல்நலத்துடன் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருப்பதாகவும், புதிதாக நோயாளிகள் அழைத்துவரப்பட்டால், இந்த 26 பேரில் ஒருவரை ‘அவசர சிகிச்சை’ பிரிவில் இருந்து வெளியேற்ற நேருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுபோல் ஒவ்வொரு இரண்டு மணிநேரத்துக்கும் ஒரு தடவை ஒரு கொரோனா தொற்று நோயாளி கைவிடப்படும் அவலம் இங்கு இருப்பதாகவும் மருத்துவர் Djillali Annane குறிப்பிட்டார்.

அதேவேளை, இராணுவ மருத்துவமனைகளை உருவாக்கி வரும் ஜனாதிபதி மக்ரோனின் முடிவை தாம் வரவேற்றுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


Recommended For You

About the Author: Editor