கொரோனாக்கு காவல்துறை அதிகாரி பலி..!!

கொரோனா வைரசினால் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பரிஸ் காவல்துறை தலைமைச் செயலகம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. கடந்தவாரத்தில் இருந்து கொரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த  காவல்துறை அதிகாரி ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த காவல்துறை அதிகாரி, காவல்துறையின் நிர்வாக பிரிவில் பணி புரிபவர் எனவும், அவர் பொது மக்களுடன் தொடர்பில் இருந்திருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வாரத்தில் ஜொந்தாம் அதிகாரி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்திருந்தார்.  அதைத் தொடர்ந்து தற்போது முதன்முறையாக காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor