இல்-து-பிரான்சிலிருந்து நோயாளிகளை வெளியேற்ற வேண்டும் – எச்சரிக்கை மணி!!

மிகவும் அவசரமாக கொரோனா ரைவசினால் பாதிக்கப்பட்ட அவசர நோயளிகளை இல்-து-பிரான்சில் இருந்து வெளியேற்றி, வேறு இடங்களிற்கு அனுப்பும் நடவடிக்கையைச் செய்யவேண்டும் எனப் பரிஸ் பிராந்திய அரசவைத்தியசாலைகளான AP-HP யின் இடர்கால வைத்தியத்திய சேவைகளின் தலைவர் புரூனோ ரியூ தெரிவித்துள்ளார்.
‘நாங்கள் சுவர்களுடன் முட்டிக்கொண்டு நிற்கின்றோம். அவசரசேவைகளில் நோயளிகளை உள்வாங்க முடியாமல் திகைத்து நிற்கின்றோம்.
தொற்று நோயாளிகளின் வீச்சு அதிகரிக்கும் நிலையில், மிகவும் சிக்கிலிற்கு உள்ளாவோம். அதனால் உடனடியாக நோயாளிகளை இடம் மாற்றும் நடவடிக்கையை ஆரம்பிக்க வேண்டும்’ என அறிவுறுத்தி உள்ளார்.

Recommended For You

About the Author: Editor