யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 4 வயதுப் பாலகிக்கு வைரஸ் பாதிப்பு இல்லை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 4 வயது பாலகிக்கு கோரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவரது குருதி மாதிரிகள் ஆய்வுகூடப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் எதிர்மறையான அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தாவடியைச் சேர்ந்த 4 வயது பாலகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று சேர்க்கப்பட்டார். யாழ்ப்பாணத்தில் இனங்காணப்பட்ட முதலாவது கோரோனா தொற்றுள்ள நபரின் சகோதரியின் மகளே இவ்வாறு காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

கோரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் காணப்பட்டதால் அவரது குருதி மாதிரி ஆய்வுகூடப் பரிசோதனைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. அந்த ஆய்வுகூடப் பரிசோதனையில் பாலகிக்கு கோரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனால் பாலகி வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், தற்போது வைத்தியசாலையின் கண்காணிப்பில் யாரும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்