பொதுமக்களை வீதிக்கு இறங்கவேண்டாம் என அறிவுறுத்தல்

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு பொதுமக்களை வீடுகளில் இருக்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

நாடுமுழுவதும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் விதிக்கப்பட்டுள்ளதால் அதனை மீறிய குற்றச்சாட்டில் 4 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்குச் சட்டம் நடைமுறைமருந்தகங்களைத் திறக்க அரசு அனுமதித்த நிலையில் பொதுமக்களின் நடமாட்டம் வீதிகளில் காணப்பட்டதால் அவற்றை உடனடியாக மூடுமாறு சகல பொலிஸ் நிலையங்களுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் பணித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் கோரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தலுக்கு அடுத்து இரண்டு வாரங்களும் மிகவும் முக்கியமானது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்