நாடுமுழுவதும் மருந்தகங்கள், சுப்பர் மார்க்கட்டுக்களை உடன் மூட பணிப்பு

அரச ஒசுசல தவிர்ந்த அனைத்து மருந்தகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளை (சுப்பர் மார்க்கட்) உடனடியாக மூடுமாறு பதில் பொலிஸ் மா அதிபர், பொலிஸாருக்குப் பணித்துள்ளார்.

நாட்டில் ஊடரங்கு வேளையில் மருந்தகங்களைத் திறக்க அனுமதியளித்திருந்த நிலையில் பதில் பொலிஸ் மா அதிபர் இந்த அறிவுறுத்தலை இன்று பிற்பகல் வழங்கியுள்ளார்.

மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் வீடுகளுக்கே கொண்டு சென்று விநியோகிக்கப்படவுள்ளதால் மருந்தகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளை மறு அறிவித்தல் வரை திறப்பதற்கு பதில் பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்