கடந்த ஒருவாரத்தில் 4 ஆயிரத்து 217 பேர் கைது

ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்டமை தொடர்பாக ஒரு வாரத்திற்குள் 4 ஆயிரத்து 217 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது ஆயிரத்து 63 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிமுதல் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டதுடன், மக்கள் தமது அத்தியவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக சிறு காலவகாசம் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ள காலக்கட்டத்தில் அதனை மீறும் வகையில் செயற்படுபவர்களை கைது செய்வதாக பொலிஸார் அறிவித்திருந்த போதும் சிலர் அதனை கருத்திற் கொள்ளாது செயற்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு செயற்பட்ட பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்