நாடளாவிய முடக்கம் – கோயம்பேடு சந்தையில் வியாபாரம்

இந்தியாவில் நாடளாவிய ரீதியான ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னை கோயம்பேடு சந்தை இன்றுமுதல் 2 நாட்களுக்கு வழக்கம் போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், அத்தியாவாசிய பொருட்கள் தடையின்றிகிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காய்கறி, மளிகைக் கடைகள்வழக்கம் போல் இயங்கும் என்றுதமிழக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதன்படி, சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி,பழம், பூ விற்பனை வழக்கம் போல் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, கோயம்பேடு வணிக வளாக காய்கறி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் மார்ச் 27 மற்றும் 28-ம் தேதிகளில் கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை விடப்போவதாக பெருநகர வளர்ச்சிகுழுமத்திடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடிதம் அளிக்கப்பட்ட நிலையில், குறித்த கடிதத்தை கோயம்பேடு வணிக வளாக காய்கறி சங்கங்களின் கூட்டமைப்பு நேற்று திரும்பப் பெற்றுள்ளது.

இந்நிலையில் கோயம்பேடு சந்தையில் பொதுமக்கள் நெருக்கமாக நிற்பதை தவிர்க்கும் வகையில், ஒவ்வொரு கடைக்கு முன்பும் ஒரு மீட்டர் இடைவெளியில் கோடுகள் வரையப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள கோயம்பேடு சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரி கோவிந்தராஜன் “கோயம்பேடு சந்தையில் உள்ள அனைத்து வியாபாரிகளும் ஊழியர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கைகளை குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் அடுத்தகட்டமாக பொதுமக்கள் இடைவெளி விட்டு காய்கறி வாங்குவதை உறுதி செய்ய 1 மீட்டர் இடைவெளியில் கடைகள் முன்புகோடுகள் வரையப்பட்டுள்ளன. அதில், நின்றுதான் பொதுமக்கள்இனி வரும் நாட்களில் பொருட்களை வாங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்